மொட்டுகளை முளையிலேயே கிள்ளி எறியும் கொடூரம்!...யார் பொறுப்பு?
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்று வாய்பேச்சில் மட்டும் சமூக அக்கறையை காட்டிக்கொண்டிருக்கின்றோம்.
உண்மையிலேயே இன்றைய குழந்தைகளை எதிர்காலத்திற்கு நல்ல தலைவர்களாக உருவாக்கும் பணியை சரிவர செய்கிறோமா என்று கேட்டால் எம்மால் பதில் கொடுக்க முடியாது.
மொட்டுகளை முளையிலேயே கிள்ளி எறியும் வேலையை தான் இன்று சமுதாயம் செவ்வனே செய்து வருகின்றது.
குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள்,அவை தற்போதைய காலக்கட்டத்தில் புத்தகங்களில் பொறிக்கப்பட்ட வாசகங்களாக மட்டுமே கண்களுக்கு தென்படுகின்றது என கூறினால் பொருத்தமாக இருக்கும்.
நமது அன்றாட வாழ்வில்,ஊடகங்களில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் செய்திகள் வெளிவராத நாளே இல்லை எனலாம். அவற்றினை நாம் கடந்து செல்லாத நிமிடங்கள் இல்லை எனவும் கூறலாம்.
அங்காங்கே மணிக்கு பல குழந்தைகள் பல காம கொடூரர்களால் தமது வாழ்க்கையை,எதிர்காலத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றார்.
இவை அதிகளவு திறைக்கு பின்னால் அரங்கேறும் சம்பவங்களாகவே காணப்படுகின்றது.
இலங்கையை பொறுத்தமட்டில் துஸ்பிரயோகம் தொடர்பிலான பட்டியல் வித்தியா,வைஸ்ணவி,ஹிசாலினி,நிதர்சனா,என நீண்டுக்கொண்டே செல்கின்றது.
இவை அனைத்தும் ஊடகங்கள் வாயிலாக அறியப்பட்டதே தவிர அறியப்படாதவை ஏராளம்,வறுமைக்கும்,அறியாமைக்கும் பலியான உயிர்கள் பல.
இவரால் பிள்ளைக்கு நிச்சயம் பாதிப்பு வராது என்று ஒருவரை முற்று முழுதாக நம்பி பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு செல்லும் நபர்களிடமே தற்போது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சிறுவர்களை உடல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களை சுரண்டுதல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம் உயிர்வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கும் பாதிப்பை ஏற்படுத்துதல் போன்றவை சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
அதேபோன்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளரின் கவனயீனம், அவர்களின் அக்கறையற்ற தன்மையின் காரணமாக ஏற்படும் காயம், மரணம், உணர்ச்சி ரீதியான பாதிப்பு அல்லது ஒரு குழந்தைக்கு பாரிய தீங்கு ஏற்படக் கூடிய ஆபத்தான நிலை என்பனவும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் எனப்படுகின்றன.
சிறுவர் துஷ்பிரயோகம் என்ற ஒரு விடயம் சமூகத்தில் கொடூரமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
நாமும் அதை கண்டும் காணாமலும் சென்று கொண்டிருக்கிறோம். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டிற்க்கு வெளியில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது பெற்றோரின் கடமை. அது மட்டுமன்றி பிள்ளைகளை கண்டித்து வளர்க்கவேண்டியது அவசியம்.ஆனால் அதற்கு ஒரு எல்லை இருக்கிறது.
பிள்ளைகளை உடல்ரீதியாக அடித்து துன்புறுத்துவது மற்றும் தகாத வார்த்தைகளால் பேசுவது போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை. மேலும் தம்முடைய தனிப்பட்ட கோபங்களை பிள்ளைகளின் மேல் காட்டாமல் இருக்க வேண்டும்.
பிள்ளைகளின் ஆசை விருப்பங்கள் மற்றும் திறமைகளை மதித்து அவற்றை வளர்க்க உதவ வேண்டும் மாறாக தங்களுடைய விருப்பங்களை பிள்ளைகள் மீது திணிக்க கூடாது. தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் பெண் குழந்தைகளின் கதைகள் ஏராளம். பிஞ்சு உள்ளங்களின் நம்பிக்கையை சிதைக்காதீர்கள்.
நீங்கள் பெற்ற பிள்ளைகளை நீங்களே பாதுகாக்கவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? ஆகவே பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் கவனமாக இருங்கள்.
அதே போல் ஆசிரியர்களுக்கு பிள்ளைகளின் எதிர்காலத்தில் பெரிய பங்கு இருக்கிறது. கல்வியுடன் சேர்த்து தங்களை பாதுகாத்துகொள்ளவும் கற்று கொடுக்க வேண்டும்.
ஆசிரியராகவும் சில சமயம் தோழராகவும் இருந்தால் தான் அவரின் பிரச்சினைகளை உங்களினால் அறிந்து உதவ முடியும்.
பல கனவுகளோடும் எம்மத்தியில் சந்தோசமாக துள்ளித்திரிய வேண்டிய பிஞ்சி உள்ளங்களுக்கு எம்மால் முடிந்த பாதுகாப்பினை வழங்கி இந்த சமூகத்தில் சுகந்திரமாக சுற்றித்திரிய அமைதியான சூழலை அனைவரும் பெற்றுக்கொடுப்போம்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
