இலங்கையின் பல பகுதிகளில் ஆபத்தாக மாறிவரும் ஐக்கிய இராச்சியத்தின் கோவிட் மாறுபாடு
ஐக்கிய இராச்சியத்தின் கோவிட் மாறுபாடு இலங்கையின் மெதிரிகிரிய, காலி, ஹிக்கடுவ, வவுனியா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் பெரும் எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதனையடுத்து நாடு தழுவிய எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மருத்துவ சேவைகள் இயக்குநரும் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ராச்சியத்தின் கோவிட் மாறுபாடு (டீ1.1.7), இப்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது 50 சதவீதமளவில் அதிகமாக பரவக்கூடியது மற்றும் இறப்பு விகிதத்தில் வைரஸின் சாதாரண மாறுபாட்டை விட 55 சதவீதம் அதிகம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இராணுவம் இப்போது 10,000 படுக்கைகளை அவசரமாக தயார் செய்து
வருவதாக கோவிட் எதிர்ப்பு பணிக்குழுவின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா
தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
