உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க முன்வந்துள்ள அமெரிக்கா
அமெரிக்காவில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைனுக்கு 15 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக, யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த அமைதி திட்டம் குறித்து டொனால்ட் ட்ரம்ப் உடன் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற சந்திப்பில் முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு தரப்பும் கூறியுள்ளன.
பாதுகாப்பு உத்தரவாதம்
அமைதி ஒப்பந்தம் சுமார் 90 முதல் 95 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது.

என்றும், ஆனால் பாதுகாப்பு உத்தரவாதங்களின் கால அளவு குறித்து இன்னும் பேச்சுவார்த்தை தேவை என்றும் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தமது நாட்டுக்கு 30 முதல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும் உத்தரவாதங்கள் வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய பிரச்சினை
இந்த நிலையில், டோன்பாஸ் பகுதியின் நிலை மற்றும் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள சபோரிஜ்ஜியா அணு மின் நிலையத்தின் எதிர்காலம் ஆகியவை இன்னும் தீர்மானிக்கப்படாத முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

டோன்பாஸ் பகுதியில் ரஷ்யா தனது கட்டுப்பாட்டை முழுமையாக்க தக்க வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா முன்பு இந்த திட்டத்தின் சில அம்சங்களை நிராகரித்திருந்தாலும், தற்போது அமைதி நெருங்கிவருகிறது என்ற ட்ரம்பின் கருத்துடன் கிரெம்லின் உடன்படுவதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.