தென்னிலங்கையை உலுக்கிய படுகொலை: 8 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம்
தென்னிலங்கையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த குற்றவாளிகள் எட்டுப் பேருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன புதன்கிழமை (27) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவரைக் படுகொலை செய்தவர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை
சம்பவம் தொடர்பில் 8 சந்தேகநபர்களையும் குற்றவாளியாக கண்ட மேல் நீதிமன்று 08 பேருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.

மொஹமட் பாரிஸ் என்பவரை வெட்டிக் கொல்லபட்ட சம்பவத்தில் கைதான முகம்மது ஹம்சா, ரியாஸ்தீன் மொஹமட், மொஹமட் பிர்தவ்ஸ் உள்ளிட்ட 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam