வியாழேந்திரனின் செயலாளர் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நேற்று (01) இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பிலான விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொழும்பு நீதிமன்றில் இது தொடர்பிலான வழக்குக்கு விண்ணப்பிக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மண் அகழ்வதற்கான அனுமதி
மட்டக்களப்பில் ஆற்று மண் அகழ்வதற்கான அனுமதி வழங்க கட்டிட ஒப்பந்தகார் ஒருவரிடம் 15 இலச்சம் ரூபா இலஞ்சம் வாங்கிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரை நேற்று வியாழக்கிழமை (1) கல்லடி கடற்கரையில் மறுவேடத்தில் இருந்த இலஞ்சஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட இருவரையும் பொலன்னறுவை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்ட இலஞ்ச ஊழில் ஆணைக்குழுவினர் இவர்கள் இருவரையும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும், 15ஆ ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறும் இருவரையும் கொழும்பு நீதிமன்றில் விண்ணப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளனர்.
அவர்களை இங்கிருந்து கொழும்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினருக்கு நீதிமன்றம் கட்டளைப்பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
