முல்லைத்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த யானை
முல்லைத்தீவு - முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இன்று (02.08.2024) அதிகாலை யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள் அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து யானையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யானையின் இறப்புக்கான காரணம்
அத்துடன், யானையின் இறப்புக்கான காரணம் இதுவரை தெரியவவில்லை என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், யானையின் இறப்பு தொடர்பில், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் யானையின் இறப்பு தொடர்பான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் பின்னரே அறிய முடியும் என தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல் - சுமந்தன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam