யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு

Jaffna Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka
By Dharu Aug 02, 2024 09:39 AM GMT
Report

யாழ். தாளையடி கடல்பிரதேசத்தில் உள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் செயற்படுத்தப்பட்டும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர் இந்த செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.


இந்த விஜயத்தில் ஜனாதிபதி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் – மருதங்கேணி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டவுள்ளது.

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு

செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு

நீர் சுத்திகரிப்பு நிலையம்

யாழ்ப்பாண மக்களுக்கு சிறந்த குடிநீர் விநியோகத்தை வழங்கும் நோக்கோடு கடல் நீரை குடிநீராக்கும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு | Thalaiadi Sea Water Treatment Plant Jaffna

2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

2025 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

ஆசிய அபிவிருத்தி வங்கி

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு | Thalaiadi Sea Water Treatment Plant Jaffna

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நீர்ப்பாசன மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விசேட பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முடிவில் மாற்றமில்லை: பொதுஜன பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்தும் என்கிறார் மகிந்த

முடிவில் மாற்றமில்லை: பொதுஜன பெரமுன தனியான வேட்பாளரை நிறுத்தும் என்கிறார் மகிந்த

இந்நிலையில், பெருந்தொட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ்தேவானந்த, வடக்கு மாகாண ஆளுநர் Bsm சார்ள்ஸ், நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு செயலர் நபீல், நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் அமைச்சர் காதர் மஸ்தான் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரட்ணாயக்க வடக்கு மாகாண அவைத்தலைவர் சீவிகே சிவஞானம், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராணுவ யாழ் மாவட்ட தளபதி வந்தன விக்குரமசிங்க, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதி சக்காவா, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தலைவர், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், நிறுவனத் தலைவர்கள், திணைக்கள தலைவர்கள், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தாமதங்களுக்கு பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதனூடாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்பு பிரிவிற்க்குட்பட்ட 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு உரை நிகழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

யாழ்.தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு | Thalaiadi Sea Water Treatment Plant Jaffna

“இது வடக்கில் அதி பெறுமதி கூடிய திட்டம். யாழ்ப்பாணத்திற்க்கான ஆற்றுநீர் திட்டம் (liver for jaffna) ஒன்று ஆரம்பிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

வடமராட்சி பிரதேசம் செழிப்புறும் என்றும், தற்போதைய கடல் நீரை நன்னீராக்கும் திட்த்தில் மின்சார செலவீனம் அதிகரிப்பதால் நீரின் பெறுமதி அதிகமாக காணப்படும்.

இதனால் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி உற்பத்தி செலவீனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்ததுடன், மேலும் யாழில் சிமாட் விவசாயம் மேற்கொள்ளவதற்க்குரிய வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும்.

இந்தியா நிதி உடன் படிக்கையில் காங்கேசன்துறை நவீன மயமாக்கப்படும் என்றும், பலாலியை அபிவிருத்தி செய்து சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும்.

வரும் காலங்களில் யாழ்ப்பாணம் அபிவிருத்தி அடைந்த ஒரு பிரதேசமாக மாறும்.

தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்திற்க்கு உதவியளித்த ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதேவேளை தாளையடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தாளையடிக்கான கிராம சேவகர் பிரிவை உடனடியாக செயற்படுத்துமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.” என்றார்.

மேலதிக தகவல் - தீபன், காண்டீபன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US