ரணிலுக்கு அவசர கடிதம் அனுப்பிய விக்னேஸ்வரன்
யாழ்ப்பாணம் (Jaffna), கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரிய அவசர கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நிரந்தர அரச அதிபர்களின் நியமனம் தொடர்பில் ஏற்கனவே விக்னேஸ்வரன் எம்.பியால் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியபோதும் அதனை நிறைவேற்றாது தரம் போதாமை காரணமாகப் பதில் அரச அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, நிரந்தர அரச அதிபர்களை நியமிக்குமாறு கோரியே இந்த அவசர கடிதம் ஜனாதிபதிக்கு இரண்டாவது தடவையாகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல கோரிக்கைகள்
இந்த விடயம் தொடர்பில் இன்று முதல் 3 நாள் பயணமாக வடக்கு மாகாணத்திற்கு வரும் ஜனாதிபதியிடம் மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை முன்வைக்கவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
