பிரித்தானியாவில் விமான நிலைய ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதியால் பதற்றம்
பிரித்தானியாவில் விமான நிலைய ஊழியர்களை சரமாரியாக தாக்கிய தம்பதியால் பதற்றம் பிரித்தானியாவில் விமான நிலைய ஊழியர்களை தாக்கிய தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரிஸ்டோலில் இருந்து அலிகான்டே நகருக்கு செல்வதற்காக தம்பதி காத்திருந்த நிலையில், அவர்களது உடமைகளை பரிசோதனை செய்வதில் விமான நிலைய ஊழியர்கள் கால தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கணவர், திடீரென மனைவியை தள்ளிவிட்டு விமான நிலைய ஊழியர்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய நிலையில், அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
போதையில் இருந்த தம்பதியினர்
இந்த சம்பவம் தொடர்பில் 39 வயதான ஒரு ஆணும், 37 வயதான பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். ஜூன் 17 அன்று ஸ்பெயினில் உள்ள அலிகாண்டே நகருக்கு ஈஸிஜெட் விமானத்தில் ஏறுவதற்காகக் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இரவு 9.30 மணியளவில் அவசர அழைப்புகள் செய்யப்பட்டன, போதையில் இருந்ததால் விமானத்தில் ஏறுவதற்கு இரண்டு பேர் நிறுத்தப்பட்டதை அவான் மற்றும் சோமர்செட் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.