வாழ்க்கைச் செலவு உயர்வு - பிரித்தானியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
பிரித்தானியாவில் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், பொது மக்கள் உணவுப் பொருட்களை வாங்குவதைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் (ONS) கணக்கெடுக்கப்பட்ட பெரியவர்களில் பாதி பேர், கடந்த பதினைந்து நாட்களில் அதிக விலை காரணமாக குறைந்த உணவை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக தமது மாதாந்திர செலவு அதிகரித்து வருவதை காண்கிறார்கள் என்று தேசிய புள்ளியியல் அலுவலக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வாடிக்கையாளர்கள் பொருட் கொள்வனவு செய்வதைக் குறைத்திருப்பதாக பிரபல பல்பொருள் அங்காடிகளான அஸ்டா மற்றும் டெஸ்கோ தெரிவித்துள்ளன.
சில கடைக்காரர்கள், செலவுகளைக் குறைக்கவும், பட்ஜெட் வரம்புகளுக்கு மாறவும் முயலும்போது, மொத்தத் தொகை £30 ஆகும்போது பொருட்களை ஸ்கேன் செய்வதை நிறுத்துமாறு காசாளர்களைக் கேட்டுக் கொள்கிறார்கள் என்று அஸ்டா தெரிவித்துள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் விற்பனை வீழ்ச்சி
இதற்கிடையில், பிரித்தானியாவின் மிகப்பெரிய பல்பொருள் அங்காடியான டெஸ்கோ, அதிக பணவீக்கம் காரணமாக விலைகள் உயரும் விகிதம், குறைந்த உணவை வாங்குவது மற்றும் அடிக்கடி வருகை போன்றவற்றால் கடைக்காரர்கள் தங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்வதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் காண்கிறோம் என்று கூறியுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் தங்கள் உணவுக் கடையில் குறைவாகச் செலவழிப்பதாக பல்பொருள் அங்காடிகளின் கருத்துக்களும் பரிந்துரைத்ததாக தேசிய புள்ளியியல் அலுவலக கூறியுள்ளது.
மே மாதத்தில் பல்பொருள் அங்காடிகளில் விற்பனை 1.5 வீதத்தால் குறைந்துள்ளது, இறைச்சிக்கடைகள் மற்றும் வெதுப்பகம் போன்ற சிறப்பு கடைகளில் 2.2 வீத சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மே மாதத்தில் சில்லறை விற்பனை ஒட்டுமொத்தமாக 0.5 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பிரித்தானியாவின் பணவீக்கம் 9.1 வீதமாக அதிகரித்துள்ள நிலையில் உணவுப் பொருட்களின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.