பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவுக்கான மாணவர் விசா விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தமது விசாவுக்கான விண்ணப்பங்களை துரிதமாக சமர்ப்பிக்குமாறு பரிந்துரைப்பதாகவும் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் வெளியாக 5 வாரங்கள் ஆகும் என்பதே இதற்கு காரணம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் அதிகளவிலான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும் எனவே உடனடியாக விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஆரம்பிக்குமாறும் உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மாணவர்களிடம் கோரியுள்ளது.
(1/3) ? Calling all students ?
— UK in Sri Lanka ???? (@UKinSriLanka) June 23, 2022
UKVI strongly recommend that students apply for their visa as early as possible as decisions are taking 5 weeks to process.
We receive high levels of applications in August so you should start to prepare and submit your application form now. pic.twitter.com/cfXACUU8iB