மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை!
அரசாங்கம் தற்போது செயற்படுவது போல் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தால், இந்த ஆண்டு மேலும் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பிரதான செயலாளர் திஸ்ஸ விதாரண(Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நடக்கும் காலம் முழு உலகத்திற்கும் பொருளாதார ரீதியாக மிகவும் கடினமாக காலம். இப்படியான நிலைமையில் இலங்கை போன்ற சிறிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகள் தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்த நிலைமையை சீர்ப்படுத்த எமது கட்சி உட்பட 10 கட்சிகள் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam