பொருளாதாரம் பற்றி தெரியாதவர்களினால்நாடு பாதாளத்திற்கு செல்கின்றது
பொருளாதாரம் பற்றிய எந்தவிதமான அறிவும் இல்லாதவர்களின் தீர்மானங்களினால் நாடு பாதாளத்திற்கு செல்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் இதனை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பொருளாதாரம் பற்றிய எவ்வித ஞானமும் இல்லாதவர்களின் தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது எனவும் மாறாக நாடு மேலும் பாதாளத்தை நோக்கியே செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரம் பற்றிய நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு சந்தையை இலக்கு வைத்து தீர்மானங்களை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.