திவாலாகியது இலங்கை! பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ள தகவல்
வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத அளவிற்கு இலங்கை திவாலாகிவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி பகிரங்கமாக அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) செய்தியாளர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
இலங்கையின் மொத்த தேசிய வருமானம், பெறப்பட்டுள்ள கடன்களை திருப்பி செலுத்த கூட போதுமானதாக இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு திவாலான நிலைமைக்கே சென்றுவிட்டது.
இந்த நிலையில், பெற்ற கடன்களை கட்டித் தீர்க்க முடியாத நிலைமையில், அரசாங்கம் கொழும்பில் உள்ள பெறுமதியான சகல காணிகளையும் விற்பனை செய்ய, லென்திவா என்ற நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இந்த காணிகளை விற்பனை செய்வதன் மூலம் 400 மில்லியன் டொலர்களை சம்பாதிக்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது மிக குறைந்த வருவாய் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam