நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை தகவல்
நீர்கொழும்பில் தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும், எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் என சிலர் போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும்,போலியான செய்திகளைக் கண்டு மக்கள் ஏமாறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் சிலர் இவ்வாறான போலியான செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இவ்வாறானவர்களின் முயற்சிகளை மக்கள் ஒன்றிணைந்து தற்போது முறியடித்துள்ளனர் எனவும் விளக்கமளித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam