நீர்கொழும்பில் பதற்ற நிலை.. வன்முறை வெடிப்பு - 6 பேர் வைத்தியசாலையில் (Video)
நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன, மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுவொன்றினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Tense situation is Negombo where shops and vehicles torched#lka #SriLankaCrisis #Negombo pic.twitter.com/rz1wVSE0ri
— Prabodth Yatagama (@PrabodaYatagama) May 10, 2022
நேற்றைய தினம் குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதிக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக இன்று இந்த வன்முறை கட்டவிழ்த்தப்பட்டுள்ளது.
இரு மதங்களுக்கு இடையில் மோதல் நிலையை ஏற்படுத்த குழுவொன்று முயற்சித்த போதும், மதத்தலைவர்களின் நடவடிக்கை காரணமாக தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
