அநுர அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குற்றச்சாட்டு
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,''தற்போதைய அரசாங்கம், தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் செயற்பாடுகளை ஆயுர்வேத திணைக்களத்திலிருந்து ஆரம்பித்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான நியமனங்கள் ஊடாக அரச ஆயுர்வேத சேவை உள்ளடக்கிய அரச சேவையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan
