பாடசாலைகள் ஆரம்பமாக முதல் ஏற்படவுள்ள மாற்றம்! - செய்திகளின் தொகுப்பு
எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுமாயின் தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath)தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்கமைய, சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசேட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri