டுபாயிக்கு பறந்த மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB)அதிகாரிகள் குழு!அழைத்து வரப்போகும் பெரும் ஆபத்தான நபர்....
மத்திய குற்றப் புலனாய்வு பணியக (CCIB) அதிகாரிகள் குழுவொன்று திடீரென டுபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரபல குற்றவாளியும் போதைபொருள் கடத்தல் காரர் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்த அவரை அவசரமாக இலங்கைக்கு கொண்டு வரமுடியாது.
அழைத்துவரவுள்ள ஆபத்தான மனிதர்
அங்குள்ள சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து, அவரைக் பொறுப்பேற்பதற்கும் மற்றும் விசா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தயாராக உள்ளதாலேயே அவசரமாக டுபாய் புறப்பட்டு சென்றுள்ளனர்.
அவர் தான் 'லலித் கன்னங்கர' அல்லது 'பஸ் லலித்' என அழைக்கப்படுபவரையே அழைத்து வரச் சென்றுள்ளனர். இவர் அவிசாவளை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளில் தீவிர குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ஒருவராவார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்திருப்பது இலங்கை பொலிஸாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஏனெனில், அவரை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் அவர் சட்டத்தரணிகள் ஊடாக தப்பிச் செல்வதற்கு பலமுறை முயன்றபோதிலும் அது பலனளிக்கவில்லை.டுபாயில் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதுடன், தற்போது அவரை அழைத்து வருவதே எஞ்சியுள்ளது.

கடந்த காலத்தில் அவர் வந்து சென்றதாகவும் கதைகள் உலாவின. இவர் ஹோமாகம, அதுருகிரிய மற்றும் அவிசாவளை வரையிலான பகுதிகளில் இடம்பெற்ற பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவராவார்.
இந்தப் பகுதிகளில் இவரும் 'ஹந்தா' என்பவருமே செயற்பட்டு வந்தனர்.
எவ்வாறாயினும் இன்று (22.08.2026) அல்லது 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 'பஸ் லலித்' இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளார்.
பிரதான பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பல முக்கிய நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் சிலரே எஞ்சியுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய பிரிவினர் வெளிநாடுகளில் உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக மிகவும் சுறுசுறுப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றனர் என்பதை நாம் அறிவோம்.
அந்தச் செயற்பாடுகள் உரிய உத்திகளின் படியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறோம்.
அவ்வாறு முடிவுக்கு வந்தால், பலரது உயிர்களைக் காப்பாற்ற முடியும். எனவே, முன்னெடுத்துச் செல்லப்படும் நடவடிக்கைகளில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.