மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது : இரான் விக்ரமரட்ன
இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் மத்திய வங்கியை அரசியல்மயப்படுத்துவது மோசமான செயல் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண வேண்டுமாயின் மத்திய வங்கி சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென இதன்போது கோரியுள்ளார்.
நிதி கட்டமைப்பினை ஸ்திரப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் மத்திய வங்கி சுயாதீனமாக இயங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட நிவாரணங்கள் நாட்டின் பணவீக்கத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்யும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டு பின்னர் சிறு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் நலன்கள் கிடைக்கப் பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தனியார் துறை மற்றும் சுயதொழில்களில் ஈடுபட்டு வரும் 7 மில்லியன் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை என இரான் விக்ரமரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri