மட்டக்களப்பில் தடுப்பு காவலில் இருந்த இளைஞர் உயிரிழப்பு! - காரணம் வெளியானது
மட்டக்களப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் நான்கு ஐஸ் போதைப் பொருள் பைகளை விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரட்ணம்
இளங்கோவன் இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் 25 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட இளைஞன் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்டார்.
அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட சட்ட வைத்திய அதிகாரி அரசரெட்ணம் இளங்கோவன் தலைமையின் கீழ் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் குறித்த நபர் நான்கு பக்கட்டுக்களை கொண்ட ஐஸ் போதைப் பொருளை விழுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஐஸ் போதைப்பொருள் நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam