வெளிநாட்டு ஆடம்பர வாழ்க்கைக்காக நாட்டிலிருந்து தப்பிச்சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள்! விசாரணையில் வெளியான தகவல்கள்
பாதாள உலக குழுவினருக்கு கடமை நேர துப்பாக்கியை வழங்கி உதவி செய்த குற்றச்சாட்டில் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு அழைத்துவரப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் 2 வருடங்களாக டுபாயில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
டுபாயில் ஆடம்பரமான வாழ்க்கை
அநுராதபுரம், பேமடுவ, ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான ஜயகொடி ஆராச்சிகே கவிந்து ஆகாஷ் ஜயகொடி என்ற கல்கிசை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபர் டுபாயில் வாழ்ந்த வாழ்க்கை தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார்.
டுபாயில் அவர் தலைமறைவாக இருந்த காலத்தில், பாதாள உலகத் தலைவர் அவருக்கு தங்குமிட வசதி செய்து கொடுத்ததுடன், அவரது அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஆடம்பரமான வீட்டில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிப் பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களை குறிவைத்து, கூலிக்கு ஆட்கொலை செய்யும் நோக்கத்துடன் அந்த ஆயுதம் வாங்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது .
சந்தேகநபருக்கு சிவப்பு பிடியாணை
இதற்கிடையில், சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியுடன் தப்பிச் செல்ல உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட, மற்றொரு அதிகாரியும் கைது செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது டி-56 ரக கடமை நேரத் துப்பாக்கியை டுபாயில் தலைமறைவாகியுள்ள 'இஹல கெமுனுகே தர்ஷன' அல்லது 'ஐடி' என அழைக்கப்படுபவரின் நெருங்கிய சகா ஒருவரிடம் வழங்கிவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் குறித்த துப்பாக்கி பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் அந்நாட்டுப் பொலிஸாரினால் சர்வதேச பொலிஸார் (Interpol)ஊடாக சந்தேகநபருக்கு எதிராகச் சிவப்பு பிடியாணை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி உறவினர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக டுபாய் விமான நிலையத்திற்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினர் அவரை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை நடத்த மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 22 மணி நேரம் முன்
போருக்காக அழைக்கலாம்... தயாராக இருக்க 100,000 பிரித்தானிய ரிசர்வ் படையினருக்கு அறிவுறுத்தல் News Lankasri
வாழ்க்கையைச் சீரழித்த லண்டன் பொலிசார்... கதறும் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டவர் News Lankasri