பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்! அமைச்சரவை சந்திப்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி செயலகம் மற்றும் பாடசாலைகள் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதன் மூலம் நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.
முதல் அமைச்சரவை கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் முதல் தடவையாக கூடிய அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கோட்டா முறையின் கீழ் விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சரவைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கூடுதல் அதிகாரம் - அமைச்சரவை அனுமதி |
பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம்
இந்தநிலையில் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கும், மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதற்கும் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நிதியுதவியைப் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்று வரும்
பேச்சுக்கள் தொடர்பிலும் அமைச்சரவை விவாதித்துள்ளது.