ஒட்டுக்குழுவினரின் கொடூரம் இனிமேல் அரங்கேறக்கூடாது: சாணக்கியன் (photos)
ஒட்டுக்குழுவினர் எமது மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், துரோகங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடவுளை இந்நன்னாளில் பிரார்த்திக்கின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கத்தின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பும், நத்தார் தின ஆராதனைகளும் நேற்று (25.12.2022) மட்டக்களப்பு புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றுகையில், ‘’ஜோசப் பரராஜசிங்கம் ஆயுதம் தரித்த ஒட்டுக்குழுவினரால் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒட்டுக்குழுவினர் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள்
இவ்வாறான ஒட்டுக்குழுவினர் மக்களுக்கு இழைத்த கொடூரங்கள், துரோகங்கள் எம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க கடவுளை இந்நன்னாளில் பிரார்த்திக்கின்றேன்.
எம் மக்கள் தங்கள் ஆரோக்கியமான எதிர்காலத்தை தாங்களே உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 6 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
