நீதி அமைச்சர் இன்று ஜெனிவா பயணம்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று(24) பயணமாகின்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் இலங்கையின் முதலாவது ஆய்வுக்கூட்டம் இதுவாகும்.
ஜெனிவா பயணம்
இந்த ஆய்வுக் கூட்டத்தில், காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நீதி அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.
இந்தக் கூட்டம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் விவாதிப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



