பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவியின் சடலம் நல்லடக்கம்
பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, உயிரிழந்த மாணவியின் சடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பதுளை - ஹாலிஎல - உடுவர ஏழாம் கட்டைப்பகுதியில் 18 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் தினம் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதன்போது உயிரிழந்த மாணவியின் சடலம், பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோரின் கண்ணீருக்கு மத்தியில் மாணவியின் சடலம் உடுவர ஏழாம் கட்டை பொது மயானத்தில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஹாலி எல பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் கல்வி கற்றுவந்த மாணவி வீடு திரும்பிய சந்தர்ப்பத்தில், ஆயுதமொன்றில் தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், மாணவியை கோடாரியால் வெட்டி கொலை செய்த 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
