இந்த நாட்டின் மிகப் பெரிய வைரஸ் நாட்டின் தலைமைத்துவமாகும் – ஹரீன்
இந்த நாட்டின் மிகப் பெரிய வைரஸ் நாட்டின் தலைமைத்துவமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் ஜனாதிபதி அல்லது சேனாதிபதி தனது ஊருக்குச் சென்றுள்ள நேரத்தில் நாம் ஊடக சந்திப்பினை நடாத்துகின்றோம். இந்த நாட்டுக்கு பெரிய வைரஸ் ஒன்று வந்துள்ளது, இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது.
கோவிட் வைரஸிற்கு மத்தியில் கொமிஸ்(தரகு) வைரஸொன்றும் பரவி வருகின்றது. உலகில் எல்லா நாடுகளிலும் மக்களை பாதுகாக்கவே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.
மக்களை பாதுகாக்க தடுப்பூசி ஏற்றும் உலகில் இந்த நாட்டில் மட்டும் அரசாங்கத்தை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. காலம் தாழ்த்தியே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. இதனால் நாடு பெரும் நெருக்கடி நிலைமைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது சீனி, பால்மா, கோதுமை மா என பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாட்டுக்கு எந்தவொரு வைரசும் வெளிநாடுகளிலிருந்தே வருகின்றது.
எமது நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். கோவிட் வைரசும் வெளிநாட்டிலிருந்து வந்தது என்பதனை நான் நினைவுபடுத்துகின்றேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
