சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய இலங்கை அணி
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தம்புள்ளையில் நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
பாகிஸ்தான் அணி சார்பில்
இதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

போட்டியில் இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே அதிகபட்சமாக 40 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் சல்மான் மிர்ஷா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்நிலையில் 129 என்ற வெற்றியிலக்கு பாகிஸ்தானுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சஹிப்சதா பர்ஹான் அதிகபட்சமாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 1இற்கு 0 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri