கிரின்லாந்தை கொள்வனவு செய்வது குறித்து ஆராயும் அமெரிக்கா
கிரின்லாந்தை கொள்வனவு செய்யும் சாத்தியங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது தேசிய பாதுகாப்புக் குழு இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
கிரின்லாந்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு சாதகமான பிரதேசமாக கருதப்படுவதாகவும், ஆர்டிக் பிராந்தியத்தில் ரஷ்யா மற்றும் சீனாவின் தாக்கத்தைத் தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இராணுவ வழிமுறைகளை பயன்படுத்தப்படாது
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிரின்லாந்தை கொள்வனவு செய்வது குறித்து ஜனாதிபதி டிரம்பும் அவரது தேசிய பாதுகாப்புக் குழுவும் தற்போது தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் ராஜதந்திர ரீதியான தீர்வையே முதன்மையாகக் கருதுகிறார் என தெரிவித்துள்ளார்.
எனினும், ஏனைய அனைத்து வழிமுறைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இராணுவ வழிமுறைகளை பயன்படுத்தப்படாது என உறுதியாக கூற முடியாது எனவும் நாட்டின் நலனை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜனாதிபதியின் முதல் விருப்பம் ராஜதந்திர முறையிலான தீர்வினை எட்டுவதாகும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri