வெனிசுவேலா இடைக்கால அரசு அமெரிக்காவின் உத்தரவுகளை பின்பற்றும்..! வெள்ளை மாளிகை அறிவிப்பு
வெனிசுவேலாவின் இடைக்கால அரசு அமெரிக்காவின் உத்தரவுகளைப் பின்பற்றும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவின் இடைக்கால அரசாங்க அதிகாரிகளுடன் டிரம்ப் நிர்வாகம் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக லீவிட் கூறியுள்ளார்.
இடைக்கால அரசின் முடிவுகள்
குறிப்பாக ராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ, துணை ஜனாதிபதி மற்றும் முழு தேசிய பாதுகாப்புக் குழுவினரும் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது வெனிசுவேலாவின் இடைக்காலஅரசின் மீது அதிகபட்ச அழுத்தமும் கட்டுப்பாடும் பிரயோகிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த இடைக்கால அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்ச்சியான ஒத்துழைப்பில் இருக்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இடைக்கால அரசின் முடிவுகள் தொடர்ந்து அமெரிக்காவின் வழிகாட்டுதலின்படியே எடுக்கப்படும் என கரோலின் லீவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கருத்துகள், வெனிசுவேலாவின் அரசியல் நிர்வாகத்தில் அமெரிக்காவின் நேரடி தாக்கம் அதிகரித்துள்ளதாக சர்வதேச அளவில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam