தமிழரசுக் கட்சி மாவீரர்களுக்கு செய்த துரோகம்
ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு தமிழரசு கட்சி சம்மதித்து மாவீரர்களுக்;கு துரோகம் செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் நேற்று இடம்பெற்ற மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“உங்களுடைய பிள்ளைகள் ஒற்றையாட்சியை ஏற்க மறுத்து உயிர் கொடுத்து 15 ஆண்டுகள் இன்று கடந்துள்ள நிலையில், எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி அநுரகுமார அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வந்து நிறைவேற்ற தயாராகி கொண்டுள்ளனர்.
சுயநிர்ணய உரிமை
ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள கூடாது 19ஆம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது.

இதில் தமிழர்களுடைய 70 வருட கால சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளனர். அது மிகப் பெரும் அநியாயம் அது மாவீர்களுக்கு செய்யப்படும் ஒரு அநீதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |