கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கான பாதயாத்திரை ஆரம்பம் (Photos)
கதிர்காமத்திற்கான பாதயாத்திரை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து இன்று காலை ஆரம்பமாகியது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று நூற்றுக்கணக்கான முருக பக்தர்களின் பங்குபற்றுதலுடன் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாதயாத்திரை
முருகனின் வேலினை பாதயாத்திரையாக எடுத்துச்சென்று கதிர்காம கந்தனை பக்தர்கள் வழிபடுவது வழமையாகும்.
எனவே இன்று ஆரம்பமாகிய பாதயாத்திரை பருத்தித்துறை நகரினை சென்றடைந்து பின்னர் A9 வீதி வழியாக கிளிநொச்சியை சென்றடைந்து பின்னர் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் கலந்து கொண்ட பின் தொடர்ந்து பாதையாத்திரை கதிர்காமத்தை சென்றடையவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.





செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 23 மணி நேரம் முன்

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
