படையினரின் மோசமான செயல்களை மன்னிக்க முடியாது! - இராணுவ ஊடக பிரிவு அறிவிப்பு
சீருடையிலிருந்த ஒரு இராணுவ உறுப்பினர் மற்றும் ஒரு குழுவினர் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரப்புவதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சம்பவம் குறித்து விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு ஒழுக்கமான நிறுவனமாக இது படையினரின் இத்தகைய செயல்களை மன்னிக்க முடியாதென்று இராணுவம் கூறியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் குறித்த இராணுவ உறுப்பினருக்கும் பொதுமக்கள் குழுவுக்கும் இடையே பல சம்பவங்கள் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.



