பொது மக்களை ஒன்று கூட்டிய அதிகாரிகள்! பொலிஸார் எச்சரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவுகளை வீடு வீடாக சென்று வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்ட போதும் பல்வேறு இடங்களிலும் மக்களை ஒன்று கூட்டி நிதி வழங்குகின்ற செயற்பாடுகளில் சில அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் கோவிட் வைரஸினுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலைமையிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை 500க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 கிராம அலுவலர் பிரிவுகள் இன்னும் முடக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் நாடு பூராகவும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் உர மானியங்கள் வழங்குவதற்காக மக்கள் அதிகளவில் ஒன்று கூடுகின்ற சந்தர்ப்பங்களை முல்லைத்தீவு மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
மக்களின் இவ்வாறான அசமந்த போக்கும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக கோவிட் வைரஸினுடைய தாக்கம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான நிலைமையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் கிராம அலுவலர் பிரிவில் கிராம அலுவலர் அலுவலகத்தில் சமூர்த்தி கொடுப்பனவு வழங்குவதற்காக சுமார் 50 பேர் வரையில் ஒன்று கூடி இருந்த நிலையில், குறித்த இடத்திற்கு சமூகமான பொலிஸார் குறித்த மக்களை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததோடு, குறித்து அதிகாரிகளின் உயர் அதிகாரியான பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு அழைத்து பிரதேச செயலாளர் குறித்து அதிகாரிகளுக்கு வீடு வீடாக சென்று பணத்தை வழங்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.








சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan