முல்லைத்தீவில் இளஞ்செழியனின் வீட்டை சுற்றிவளைத்துள்ள இராணுவத்தினர்
முல்லைத்தீவில் பீட்டர் இளஞ்செழியன் வீட்டின் முன் சுடர் ஏற்றிய நிலையில் அவருடைய வீட்டை இராணுவத்தினர் சற்றுமுன்னர் சூழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறுதி யத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய நாளில் உலகம் எங்கிலும் வாழ்கின்ற தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக தமிழின பேரவலத்தின் நினைவேந்தல் நாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலைமையிலும் பல்வேறு தடைகளைத் தாண்டியும் பலர் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் .
அந்த வகையிலே இன்று மாலை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் முக்கியஸ்தர்களில்
ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் முல்லைத்தீவு மணற்குடியிருப்பில் உள்ள தன்னுடைய
வீட்டில் உறவுகளுக்காக சுடரேற்றி அஞ்சலி செலுத்திய நிலையில் அவருடைய வீட்டினை
இராணுவத்தினர் சூழ்ந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகின்றதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.








போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
