தொடருந்து நிலையங்களில் இன்றும் குவிக்கப்படும் இராணுவம்
நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள தொடருந்து நிலையங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், தொடருந்து திணைக்களத்திற்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு தொடருந்து திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவத்தினர் குவிப்பு
அதற்கமைய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்த்ராவா தெரிவித்தார்.
இதனால், தொடருந்து நிலையங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், நடமாடும் சேவை மூலம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
