தமிழ் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள்

Sri Lanka Army Badulla Sri Lanka Police Investigation
By Rakesh Sep 02, 2024 01:08 PM GMT
Report

பண்டாரவளை, தொடருந்து நிலையத்தில் தமிழ் இளைஞன் ஒருவரைத் தாக்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 8 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடருந்து நிலைய அதிபரால் பண்டாரடவளை பொலிஸாருக்குத் தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம்  நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

புறப்படுவதில் தாமதம்

தியத்தலாவை இராணுவ முகாமியில் சேவையாற்றும் மேற்படி இராணுவ அதிகாரிகள், விடுமுறையில் வீடு செல்லும் வழியிலேயே இவ்வாறு ஒழுக்கமற்ற விதத்தில் செயற்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

தமிழ் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள் | The Army Brutally Attacked The Tamil Youth

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்தானது பண்டாரவளை தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது

இதன்போது தொடருந்து நிலைய அலுவலகக் கடமையின் நிமித்தம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வேளையில் தொடருந்தில் இருந்து இறங்கியுள்ள மேற்படி இராணுவச் அதிகாரிகள் , பாடல் பாடியுள்ளதுடன், கூச்சல் சத்தமும் எழுப்பியுள்ளனர்.

விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கிய சஜித்திற்கு ஆதரவு: சுமந்திரன் மீது கடும் விமர்சனம்

விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கிய சஜித்திற்கு ஆதரவு: சுமந்திரன் மீது கடும் விமர்சனம்

பொலிஸில் முறைபாடு

இதன்போது நிலத்தில் வீழ்ந்திருந்த பணப் பையை அவர்களிடம் ஒப்படைப்பதற்குத் தமிழ் இளைஞன் ஒருவர் சென்றுள்ளார்.

இதன்போது அந்தத் தமிழ் இளைஞன் பணம் களவாடியுள்ளார் என்று கூறி அவர் மீது இராணுவ அதிகாரிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

தமிழ் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள் | The Army Brutally Attacked The Tamil Youth

தொடருந்து நிலைய அதிபரும், அங்கிருந்தவர்களும் தாக்குதலைத் தடுக்கச் சென்ற வேளை, அவர்கள் மீதும் தாக்குதல் நடத்த முற்பட்டு, அடாவடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பண்டாரவளை தொடருந்து நிலைய அதிபர் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஆகியோரால் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பண்டாரவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

ரணில், அநுர, சஜித்துக்கு கிடைத்த டொலர் முதலீடு!

ரணில், அநுர, சஜித்துக்கு கிடைத்த டொலர் முதலீடு!

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

ஏப்ரல் மாதத்திற்குள் வரிக் குறைப்பு : சலுகை வழங்க திட்டமிடும் ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US