பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்திபெற்ற பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தேர்த உற்சவம் இன்று (21)வெகுவிமர்சையாக நடைபெற்றது.
குறித்த ஆலயத்தின் மகோற்சவ விழாவானது கடந்த 12ஆம் திகதி கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமானது.
பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் இன்றைய தினம் தேர் உற்சவம் நடைபெற்றது.
சிறப்பு அபிசேக பூஜை
இன்று காலை வசந்த மண்டபத்தில் ஆறுமுகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன் ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஓரு பகுதியாகவும் வடமிழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
தேர் உற்சவத்தினை தொடர்ந்து சுவாமி பச்சையினால் அலங்கரிக்கப்பட்டு ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு சிறப்பு அபிசேகமும் பூஜையும் நடைபெற்றது.
தீர்த்தோற்சவம்
இன்றைய தேர் உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.
மேலும், நாளைய தினம் காலை முருகப்பெருமானின் தீர்த்தோற்சவம் பெரியகல்லாறு இந்து மகா சமுத்திரத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
