ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ள எதிர்கட்சி எம்.பி
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பை ஓகஸ்ட் முதல் வாரத்தில் அவர் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி தம்மை உரிய முறையில் நடத்தவில்லை என்பது சரத் பொன்சேகாவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ள நிலையில் அவர் இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சஜித் தரப்பு
பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம், அவர் கட்சியை விட்டு வெளியேறினால் சஜித் தரப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் காரணத்தினால் என அரசியல் அரங்கில் பேசப்படுகிறது.
இந்நிலையில், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட பொன்சேகா, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
