கிளிநொச்சி - முகமாலை தூய ஆரோக்கியமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா
கிளிநொச்சி - முகமாலை தூய ஆரோக்கியமாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் நற்கருணை வழிபாடும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
1998ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யுத்த பிரதேசமாக காணப்பட்ட கிளிநொச்சி முகமாலை பகுதியில் வரலாற்று தொன்மை வாய்ந்த தூய ஆரோக்கிய மாதா ஆலயம் யுத்தத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களால் குறித்த ஆலயம் புனரமைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
வருடாந்த திருவிழா
இதன்படி இன்று(15.09.2024) வருடாந்த திருவிழா உற்சவம் நடைபெற்றது.
இதில் குறித்த பிரதேசத்தை சேர்ந்த பங்கு மக்கள் முகமாலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இன்று வரை மீளக் குடியமர முடியாத நிலையில் பல்வேறு பகுதிகளிலும் தங்கி உள்ளவர்கள், என பலர் கலந்து கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



