விமான நிலைய பீ.சீ.ஆர் ஆய்வகம் மீண்டும் திறக்கப்பட்டது
சுகாதார அதிகாரிகள் அங்கீகாரம் வழங்காமையால், செயற்பாடுகளை மேற்கொள்ளாது மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையத்தின் பீ.சீ.ஆர் (P.C.R) பரிசோதனை ஆய்வகத்தின் செயற்பாடுகள் மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பீ.சீ.ஆர் தளத்தின் ஊடாக கோவிட் தொடர்பான முடிவுகளை மூன்று மணித்தியாலங்களுக்குள் வழங்க முடியும் என்று ஆய்வகத்தின் முகாமையாளர் சுமுது சரசிராஜா (Sumudu Sarasiraja) தொிவித்துள்ளார்.
இதனையடுத்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அனைத்து பயணிகளும் மற்றும் ஒரு தடுப்பூசி அளவைப்பெற்றுக்கொண்ட பயணிகளும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின் போது கோவிட்க்கு சாதகமான முடிவுகளை கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள்.
எனவே விமான நிலையத்துக்கு அனைத்துப் பயணிகளும் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்த ஆய்வகம் திறந்ததன் பின்னர் ஞசு 678 இலக்க கட்டார் எயார்வெய்ஸில் இன்று அதிகாலை 2.15க்கு வந்தவர்களே பீ.சீ.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.









