வசீம் தாஜுதீன் கொலைக்கு காரணம் காதல் விவகாரமா..! வெளிவரப்போகும் உண்மைகள்
முன்னாள் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை அதற்கான நீதி வழங்கப்படவில்லை.
வசீம் தாஜுதீன், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் விபத்து ஏற்பட்டு இறந்ததாக அப்போதைய ஆரம்பகட்ட விசாரணைகளில் கூறப்பட்டிருந்தது.
எனினும், 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், வசீம் தாஜுதீனின் மரணம், ஒரு படுகொலை என சிஐடியினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்திருந்தனர்.
இதனையடுத்து, வசீம் தாஜுதீனின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது, அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வசீம் தாஜுதீன் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு கதைகள் கூறப்பட்டு வந்தன.
யோஷித ராஜபக்ச, வசீம் தாஜுதீன் மற்றும் இன்னொரு பெண் இடையிலான காதல் விவகாரமே இதற்கு காரணம் என ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.
மேலும், ரக்பி அணியில் நாமல் ராஜபக்ச மற்றும் வசீம் தாஜுதீன் இடையிலான போட்டியே கொலைக்கு காரணம் என மற்றுமொரு தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு பல கதைகள் கூறப்பட்டாலும் உண்மையான விடயங்கள் எதிர்கால விசாரணைகளில் தெரியவரும்.
இவ்வாறிருக்க, வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட இடத்தின் தற்போதைய நிலையை எமது செய்தியாளர் குழு நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? Cineulagam
