தெற்காசியாவை ஆட்கொள்ளும் செயற்கை நுண்ணறிவு கேள்வி
இலங்கை உட்பட தெற்காசியா முழுவதும் AI என்ற செயற்கை நுண்ணறிவுக்கான கேள்வி வேகமாக அதிகரித்து வருவதாக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் போக்கு தொழில்களுக்கு புதியவர்களை சேர்க்கும் முறையிலும் பாதிப்புக்களை ஏற்படுத்த தொடங்கியுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
2023 ஜனவரி மற்றும் 2025 மார்ச் மாதத்திற்கு இடையில், இந்தப் பிராந்தியத்தில் AI தொடர்பான பணிகள், 2.9 வீதத்திலிருந்து 6.5 வீதமாக அதிகரித்துள்ளன.
22வீத வேலைகள்
இதனடிப்படையில் AI தொழில்நுட்பம், வேலை பட்டியல்களை விட 75 வீதத்தால் வேகமாக வளர்ந்துள்ளது. தெற்காசியாவில் சுமார் 22வீத வேலைகள் AIக்கு உட்பட்டவை என்று தரவுகள் கூறுகின்றன.

நேபாளத்தை பொறுத்தவரையில் அங்கு AI மிகக் குறைந்த சராசரி வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. பூட்டான் மற்றும் இலங்கை அதிக வெளிப்பாடு விகிதங்களைக் காட்டுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள்... உக்ரைனுக்கு உதவ பிரித்தானியாவின் அதிரடி திட்டம் அம்பலம் News Lankasri