கொழும்பில் 42-வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் (Videos)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி பொதுமக்கள் கொழும்பு - காலிமுகத்திடலில் தொடர்ந்து 42வது நாளாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியினை இராஜிராம செய்திருந்தார்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் பதவி விலகக்கோரி பொதுமக்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது “விற்பனை செய்யப்பட்ட மக்கள் சொத்துக்களை மீண்டும் சுவீகரித்தல்”, “அரசியல்வாதிகளால் கொள்ளையிடப்பட்ட செல்வத்தை மீண்டும் கைப்பற்றுதல்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதகைகளை காட்சிப்படுத்தியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri