ஹரிணி பதவி விலகாவிடின் மக்கள் போராட்டம் வெடிக்கும்– மொட்டுக் கட்சி பகிரங்க எச்சரிக்கை
கல்வி அமைச்சராகவும் பிரதமராகவும் பதவி வகித்து வரும் ஹரிணி அமரசூரிய உடனடியாகக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகாவிடின், நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஒரே நபர் பிரதமர் பதவியையும் கல்வி அமைச்சர் பதவியையும் ஒரே நேரத்தில் வகிப்பது அரசியல் நெறிமுறைகளுக்கும் நிர்வாக ஒழுங்குக்கும் முரணானது.
தனி அமைச்சரை நியமிப்பது
குறிப்பாக, கல்வித்துறை தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதற்கான முழுக் கவனமும் பொறுப்பும் அவசியமாகும்.
கல்வி துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள், ஆசிரியர் நியமனங்கள், பல்கலைக்கழக நிர்வாக விவகாரங்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் கொள்கை முடிவுகள் தொடர்பில் அரசின் செயற்பாடுகள் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலை தொடருமானால், மக்கள் தங்களது அதிருப்தியை வீதியில் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
அரசு மக்களின் குரலைக் கேட்காவிட்டால், மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லாமல் போவார்கள். அதற்கான முழுப் பொறுப்பும் அரசின் மீதே இருக்கும்.
கல்வி அமைச்சுப் பொறுப்பை முழுமையாகக் கவனிக்கக்கூடிய தனி அமைச்சரை நியமிப்பதே தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற தீர்வாக இருக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam