இலங்கையில் இருந்து லண்டனிலுள்ள சிங்கள பெண்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்
பிரித்தானியாவிலுள்ள இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு, இலங்கையிலுள்ள ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லண்டனில் வசிக்கும் ஷானிகா மற்றும் நாதினி பிரித்தானிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இலங்கை ஒளிபரப்பாளர் மோக்ஷ பிரசாத் தங்களிடமிருந்து ஒரு மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகவும், பணத்தை மீள கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாடு தாக்கல்
கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று, இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசைக்கலைஞர் ரொமேஷ் சுகதபாலா நடத்தும் வெள்ள நிவாரணத் திட்டத்திற்காக குற்றம் சாட்டப்பட்டவர் தங்களிடமிருந்து 30,000 ரூபாய் மோசடி செய்ததாகவும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri