தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது அல்ல! பௌத்த காங்கிரஸ் கடிதம்

Jaffna Northern Province of Sri Lanka
By Rakesh Oct 18, 2025 03:32 PM GMT
Report

யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி, தேவநம்பியதீஸ மன்னன் காலத்துப் பௌத்த நிலம். அது சட்டவிரோதமானது அல்ல. விகாரைக்கு உரிய காணிகளில்தான் தற்போது குடியிருப்புகள் அமைந்துள்ளன என்று இலங்கை பௌத்த காங்கிரஸ், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தனுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ விகாரை தேவநம்பியதீஸ மன்னனின் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதாக அறிய முடிகின்றது. அது பின்னர் பாழடைந்த நிலைக்குச் சென்றது.

எனினும், அந்த விகாரை 1950ஆம் ஆண்டுகளில் மீளவும் அமைக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு வரை முறையாகப் பராமரிக்கப்பட்டது.

செவ்வந்தியை கைது செய்த இலங்கை! கோட்டாபயவை காப்பாற்ற காணாமல் ஆக்கப்பட்ட சாரா..

செவ்வந்தியை கைது செய்த இலங்கை! கோட்டாபயவை காப்பாற்ற காணாமல் ஆக்கப்பட்ட சாரா..

1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் 

இதற்கும், முன்னைய காலத்தில் இந்த விகாரை பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்திருந்தது என்பதற்கும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் தற்போதும் உள்ளன.

தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது அல்ல! பௌத்த காங்கிரஸ் கடிதம் | Thayidi Tissa Temple Is Not Illegal

1958ஆம் ஆண்டு நில அளவைத் திணைக்களம் வெளியிட்ட வரைபடங்களில் 20 ஏக்கர் பரப்பளவு விகாரைக்காக ஒதுக்கப்பட்டது. விகாரையுடன் பழமையான குளமும் இருந்தது. தற்போது அந்தக் குளம் கோவில் எல்லைக்கு வெளியே அமைந்துள்ளது.

விகாரை கைவிடப்பட்ட நிலைக்குச் சென்றதால், 1971ஆம் ஆண்டின் நகர அபிவிருத்தித் திட்டத்தில் அந்த இடம் கைவிடப்பட்ட விகாரை என்று குறிப்பிடப்பட்டது.

1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட போர் காரணமாக, அந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர். இதன்போது, விகாரையும் அதைச்சுற்றியுள்ள ஆறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பும் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர், 2018ஆம் ஆண்டு விகாரை நிலம் அடையாளம் காணப்பட்டு, திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது. இராணுவத்தின் ஒத்துழைப்புடனேயே கட்டுமானப் பணிகள் இடம்பெற்றன. 

அபிவிருத்திப் பணிகள்

2019ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டுவரை திஸ்ஸ விகாரையில் விரிவான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தையிட்டி திஸ்ஸ விகாரை சட்டவிரோதமானது அல்ல! பௌத்த காங்கிரஸ் கடிதம் | Thayidi Tissa Temple Is Not Illegal

2019ஆம் ஆண்டு அப்போதைய பிரதேசசெயலர் சிவஸ்ரீ விகாரைக் காணிகளில் ஒரு பகுதியை மக்களின் குடியேற்றத்துக்காக வழங்கினார். இதனால், 2024ஆம் ஆண்டு, நில அளவைத் துறை மறுமுறை அளவீடு செய்ததில் 14 ஏக்கர் மற்றும் 5.97 பேர்ச் நிலப்பரப்பே விகாரைக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இது 1959ஆம் ஆண்டு குறிக்கப்பட்ட நிலப்பரப்பை விட குறைவாக இருந்தாலும், எஞ்சியுள்ள நிலப்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் தற்போதைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுதந்திரத்துக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பௌத்த பாடசாலை திஸ்ஸ விகாரையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் திஸ்ஸ விகாரைக்கு வருவதால், அங்கு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

அந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம். அத்துடன், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விகாரையைப் பாதுகாத்துத் தருமாறும் கேட்கின்றோம்" என்றுள்ளது.

இஷாரா உள்ளிட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இஷாரா உள்ளிட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US