இஷாரா உள்ளிட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நேபாளத்தில் கைதாகிய இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஆறு பேரையும் மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஷாரா உள்ளிட்ட நால்வர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிலும், மற்றைய இருவரும் பேலியகொட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் மேற்கு குற்றத் தடுப்புப் பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வலையமைப்பில் தொடர்பு
குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கொழும்பு குற்றப்பிரிவு தற்போது விசாரித்து வருகின்றது.
இதனிடையே களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் கம்பஹா பாபா, கெஹெல்பத்தர பத்மேவின் தந்தையிடமிருந்து பத்மேவை அடையாளம் கண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பிலும் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
கம்பஹா ஒஸ்மானை கொலை செய்வதற்காக துப்பாக்கிதாரிகள் பயணித்த கெப்ரக வாகனத்தை பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில் தம் வசம் வைத்திருந்ததாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



