தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாகாண ரீதியில் பல்துறை கலைஞர்கள் கௌரவிப்பு!
தந்தை செல்வாவின் பிறந்த நாளை முன்னிட்டு தந்தை செல்வா நற்பணி மன்றத்தினால் பல்துறை ஆளுமைகளுக்கு தந்தை செல்வா விருது இன்று (30) மாலை வழங்கி வைக்கப்பட்டது.
யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் விசாகப்பெருமாள் உமாபதி தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
விருது
இதன் பொழுது வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கபட்டது.
தொடர்ந்து தந்தை செல்வா, நற்பணி மன்றத்தினால் பொருண்மியம் நலிந்தோருக்கு மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பொழுது தந்தை செல்வா நற்பணி மன்றத்தினர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சியில் தந்தை செல்வாவின் 127ஆவது ஜெயந்தி தினம் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது செல்வநாயகம் அறக்கட்டளையினுடைய ஏற்பாட்டில் இன்று (30) பகல் 9.30மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மரக்கன்றுகள் நடுகை
இந்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கூட்டுறவு சங்க மண்டப வளாகத்தில் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன.
இந்தநிகழ்வில் வடமாகாண ஆளுநர் மற்றும் முன்னாள் யாழ்.இந்தியத்தூதுவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

