மாத்தளையில் பயணப்பையிலிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்பு!
மாத்தளை- சுது கங்கை வனப்பகுதியில் பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 02 தோட்டாக்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மாத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே நேற்று (29) இந்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
மேலும், இந்த T-56 துப்பாக்கியை மறைத்து வைத்த சந்தேக நபர்களைக் கைது செய்ய மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், நாடு முழுவதும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை இணைந்ததாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, அண்மைக் காலமாக துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
